நத்திங் 3 ஸ்மார்ட்போன்  படம் / நன்றி - நத்திங்
வணிகம்

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) மின்னணு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா என மூன்று நாடுகளிலும் இன்று ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நத்திங் நிறுவனம், மின்னணு பொருள்களுக்கு மத்தியில் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான நத்திங் 3 ஸ்மார்ட்போன் இன்று வெவ்வேறு நேரங்களில் மூன்று நாடுகளில் அறிமுகமாகியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

நத்திங் 3 ஸ்மார்ட்போனில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

  • ஸ்நாப்டிராகன் 8 எஸ் 4ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

  • நிறுவனத்தின் சொந்த இயங்குதளமான நத்திங் ஓஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

  • வேறு எந்த மத்திய ரக ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் 16GB உள்நினைவகம் உள்ளது.

  • ஓஎல்இடி திரையுடன் பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில், 120Hz திறன் உடையது.

  • 5,150mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 65W திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் மூன்று கேமராக்கள் உடையது. 50MP முக்கிய சென்சாருடன் மற்ற இரு லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • ஆன்டிராய்டு மேம்படுத்திக்கொள்ளும் வசதி 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஸ்மார்ட்போனில் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

Nothing's new smartphone has been launched in the electronics market today (July 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT