PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிவு!

அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக இன்று முடிந்தது.

DIN

மும்பை: இன்றைய அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிந்தது.

அமெரிக்க நாணயத்தின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்றம் ஆகியவற்றால் முதலீட்டாளர்களிடம் ஆர்வம் அதிகரித்தது.

ஃபெடரல் ரிசர்வ் கொள்கையில் அதிபர் டிரம்பின் வளர்ந்து வரும் செல்வாக்கால், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்த அச்சங்களை மீண்டும் எழுப்பியதால், பிப்ரவரி 2022- க்கு பிறகு அமெரிக்க டாலர் குறைந்த அளவில் வர்த்தகம் செய்யப்படுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.66 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.34 ஆக தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51ஆக முடிந்தது.

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.85.76 ஆக முடிந்தது.

Summary: Rupee appreciated 25 paise to close at 85.51 against the US dollar on Tuesday.

இதையும் படிக்க: உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா்: உயா்நீதிமன்றம் கருத்து

SCROLL FOR NEXT