வோடாஃபோன் - ஐடியா  கோப்புப் படம்
வணிகம்

புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!

வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையைத் தொடங்கியுள்ளது.

DIN

வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடியா செய்துள்ளது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5 ஜி இணைய சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பதால், அவர்களுக்கு ஈடுகொடுத்து தனது பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 5ஜி சேவைகளை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது.

அந்தவகையில், அகமதாபாத், ஆக்ரா, ஒளரங்கபாத், கோழிக்கோடு, கொச்சி, இந்தூர், டேராடூன், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னெள, மதுரை, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், ராஜ்கோட், சோனிபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் பெங்களூரு, தில்லி, மும்பை, சண்டிகர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் தொடங்கியிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அளவற்ற 5 ஜி பயன்பாடு

வோடாஃபோன் - ஐடியா பயனர்கள் ரூ. 299-ல் தொடங்கும் குறிப்பிட்ட பிரீபெட் திட்டங்களுக்கு வரம்பற்ற 5 ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

Vodafone Idea (Vi) announcing the extension of 5G network infrastructure into twenty-three more cities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT