அப்பாச்சி  படம்: டிவிஎஸ் மோட்டார்
வணிகம்

பழுது எச்சரிக்கை வசதியுடன் அப்பாச்சி ஆர்டிஆர் 160!

அப்பாச்சி ஆர்டிஆர் 160 2025 மாடல் பற்றி...

DIN

மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடல் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 2025 மாடலில் பைக்கின் என்ஜின் மேம்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

2025 மாடலின் தோற்றம் முந்தைய மாடலைப் போலவே இருக்கின்றது. இதன் ஹெட்லேம்ப் டிசைன் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வாகன உற்பத்தி விதிகளான ஓபிடி2பி தர நிர்ணயங்களுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இதில், 160 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூலண்டு மோட்டார் உள்ளது. அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம், அதிகபட்சமாக 16 எச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

சிவப்பு அலாய் சக்கரங்களுடன் கூடிய மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ணங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் ஷோ ரூம் விலை ரூ. 1.34 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TVS has launched the updated Apache RTR 160 model.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

SCROLL FOR NEXT