ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் படங்கள்: எக்ஸ் / ஓப்போ இந்தியா.
வணிகம்

கேமராவுக்கு முக்கியத்துவம்... அறிமுகமானது ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!

ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நீண்டநாள் காத்திருப்பிற்குப் பின் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தின், ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்றுமுதல் (ஜூலை 3) அறிமுகமாகியுள்ளது.

கேமராவுக்காக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஓப்போ நிறுவனத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்த வகைமையில் ஓப்போ ரெனோ 14, ரெனோ 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளன.

ஓப்போ ரெனோ 14 சிறப்பம்சம்

  • டிஸ்பிளே: 6.59 அங்குலம் கொண்ட அமோல்ட் திரை. 120Hz புதுப்பிப்பு வேகத்தில் இயங்கக் கூடியது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுள்ளது.

  • புராசசர்: மீடியாடெக் டைமென்சிட்டி 8350

  • ரேம்: 12 ஜிபி வரை

  • நினைவகம் (ஸ்டோரேஜ்) : 512 ஜிபி வரை

  • பின்பக்க கேமரா: 50MP முதன்மை (ஓஐஎஸ்) + 50MP டெலிபோட்டோ + 8MP அல்ட்ரா வைட்.

  • முன்பக்க கேமிரா: 50 MP

  • பேட்டரி: 6,000mAh

  • சார்ஜிங்: 80W வயர் சார்ஜிங்.

  • ஓஎஸ்: கலர் ஓஎஸ் 15

ஓப்போ ரெனோ 14 ப்ரோ சிறப்பம்சம்

  • டிஸ்பிளே: 6.83-அங்குலம் கொண்ட முழு ஹெட் அமோல்ட் திரைக் கொண்டது. 120Hz புதுப்பிப்பு வேகத்தில் இயங்கக் கூடியது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு வசதியுள்ளது.

  • புராசசர்: மீடியாடெக் டைமென்சிட்டி 8450

  • ரேம்: 16 ஜிபி வரை

  • நினைவகம் (ஸ்டோரேஜ்): 512 ஜிபி வரை

  • பின்பக்க கேமரா: 50MP OV50E (ஓஐஎஸ்) + 50MPடெலிபோட்டோ (3.5x ஆப்டிகல், 120x டிஜிட்டல்) + 50MP அல்ட்ரா வைட்.

  • முன்பக்க கேமரா: 50MP ஜேஎன்எஸ் ஆட்டோஃபோகஸ்

  • பேட்டரி: 6,200mAh

  • சார்ஜிங்: 80W வயர் சார்ஜிங்.

  • ஓஎஸ்: கலர் ஓஎஸ் 15

  • பாதுகாப்பு வசதி: ஐபி66, ஐபி68, ஐபி69 காற்று, நீர் உட்புகாத் தன்மைக் கொண்டது.

ஓப்போ ரெனோ 14 விலை விவரங்கள்

8+256 ஜிபி மாடல்: ரூ. 37,999.

12+256 ஜிபி மாடல் : ரூ. 39,999.

12+512ஜிபி மாடல் : ரூ. 42,999.

இந்த வகை ஸ்மார்ட்போன்கள் ஃபாரஸ்ட் கிரீன், பியர்ல் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ 14 ப்ரோ விலை விவரங்கள்

12+256 ஜிபி மாடல் : ரூ. 49,999.

12+512ஜிபி மாடல் : ரூ. 54,999.

இந்த வகை ஸ்மார்ட்போன்கள் டைட்டானியம் கிரே, பியர்ல் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் ஜூலை 8ஆம் தேதி முதல் அமேசான், ப்ளிப்கார்ட், அருகில் உள்ள ஓப்போ நிறுவனத்தின் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

After a long wait, the Oppo Reno 14 series smartphones have been launched.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிடுக்கான பியூட்டி... ரேஷ்மா!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க்கின் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையும் சமர்ப்பிப்பு!

மகாராஷ்டிரத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

ரோஹித் சர்மா கேப்டனில்லை; இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!

SCROLL FOR NEXT