கோப்புப்படம் 
வணிகம்

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
83,658.20 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 306.48 புள்ளிகள் குறைந்து 306.48 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 101.80 புள்ளிகள் குறைந்து 25,374.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறை ரீதியாக நிஃப்டி ஐடி துறை அதிக இழப்பைச் சந்தித்து வருகிறது. விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்தன.

ஆட்டோ, பார்மா, எஃப்எம்சிஜி குறியீடுகளும் சரிவுடன் உள்ள நிலையிலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபமடைந்துள்ளன.

சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

அதேநேரத்தில் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், டிசிஎஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்தன.

On the fourth trading day of the week India's stock markets traded in red in afternoon session. Sensex slides 300 pts, Nifty near 25,400.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT