ரியல்மீ  படம் / நன்றி - ரியல்மீ
வணிகம்

அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

வலுவான புற அமைப்பு மற்றும் அதீத பேட்டரி திறன் ஆகியவை நர்ஸோ 80 லைட் 4ஜியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இணையதளச் செய்திப் பிரிவு

ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கவரும் வகையிலான வலுவான புற அமைப்பு மற்றும் அதீத பேட்டரி திறன் ஆகியவை நர்ஸோ 80 லைட் 4ஜியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரியல்மீ நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனானது, 6.74 அங்குல எச்.டி. திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 180Hz திறன் கொண்டது.

  • ராணுவ தரத்திலான அதிர்வு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதால், இந்த ஸ்மார்போன் தவறுதலான விபத்துகளில் கீழே விழும்போது சேதமடையும் வாய்ப்பு குறைவு.

  • தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP54 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • 4ஜியில் மற்ற ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 6300mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்தால், இரண்டு நாள்களுக்கு பேட்டரி நீடித்திருக்கும் என ரியல்மீ கூறுகிறது.

  • பின்புறம் 13MP கேமராவுடன் OV13B10 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 5MP வழங்கப்பட்டுள்ளது.

  • இரு வகை நினைவக வேறுபாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

  • 4GB உள் நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,299

  • 6GB உள் நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 8,299.

இதையும் படிக்க |ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

Realme Narzo 80 Lite 4G Launched in India: Check Out Features, Price, and Specs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

நெல்லையில் செப். 13-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!

SCROLL FOR NEXT