வணிகம்

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,921 கோடியாக உள்ளது. இது முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,368 கோடியாக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7.53 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டு ரூ.42,279 கோடியாக உள்ளது. முந்தைய ஜனவரி-மாா்ச் கலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT