ரெட்மி நோட் 14 எஸ்இ  படம் / நன்றி - ரெட்மி
வணிகம்

குறைந்த விலையில் நிறைவான அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 14 எஸ்இ!

ரெட்மியின் புதிய வரவான நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

ரெட்மி நிறுவனத்தின் நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்பட, ரெட்மி நோட் 14 வரிசையில் இதுவரை அறிமுகமான அனைத்து ஸ்மார்ட்போன்களுமே மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

அந்தவகையில் தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ என்ற ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து இது எந்தவகையில் வேறுபடுகிறது, சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்.

ரெட்மி நோட் 14 எஸ்இ சிறப்பம்சங்கள்

  • ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போனானது அறிமுகமாகியிருந்தாலும், இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் ஆக. 7 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 7025, ஆக்டா கோர் புராசஸர் கொண்டது.

  • ஆன்டிராய்டு 15 அடிப்படையிலான ஷாவ்மி ஹைப்பர் இயங்குதளம் (ஓ.எஸ்.) கொண்டது.

  • 6.67 அங்குல எச்.டி. திரை கொண்டது. எந்தவித இடையூறுமின்றி சுமுகமாக திரை இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. வெய்யில் நேரத்திலும் திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 2100 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை உடையாத வகையில் கொரில்லா கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரைக்குட்பட்ட பகுதியில் விரல் ரேகைப் பதிவு கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP கேமராவுடன் சோனி நிறுவனத்தின் LYT 600 லென்ஸ் கொண்டுள்ளது. இதன்மூலம், வெளிச்சம் குறைவான பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 20MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 5110mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • இரு ஸ்பீகர்களுடன், 300% ஒலி அளவை கூட்டிக்கொள்ளும் அம்சம் இடம்பெற்றுள்ளது.

  • 6GB உள் நினைவகம் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999.

  • சில முக்கிய வங்கிகள் ரூ.1000 வரை தள்ளுபடி வழங்குகின்றன. ஆக. 7 நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கும்.

இதையும் படிக்க | அதிக பேட்டரி! ... ஓப்போ ரெனோ 14 வரிசையில் புது ஸ்மார்ட்போன்!

Redmi Note 14 SE 5G launched in India with 50MP Camera and MediaTek Dimensity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT