டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவடைந்தது.
மும்பை: எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவடைந்தது.
இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பான் வங்கியின் பணவியல் கொள்கை முடிவுகள் வெளியாக இருப்பதாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.76 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், அது குறைந்தபட்சமாக ரூ.86.30 ஐ தொட்டது. முடிவில் 12 காசுகள் குறைந்து ரூ.86.82-ஆக முடிவடைந்தது.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.70 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!
Rupee falls 12 paise to close at 86.82 against $
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.