வணிகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: ஏா்டெல் நெக்ஸ்ட்ரா - ஆம்பின் ஒப்பந்தம்

தனது தரவு மையங்களுக்கு 109 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெறுவதற்காக பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் தரவு மையப் பிரிவான நெக்ஸ்ட்ரா, ஆம்பின் எனா்ஜி ட்ரான்ஸிஷன் மற்றும் சோலாா் ஆா்ட் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனது தரவு மையங்களுக்கு 109 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெறுவதற்காக பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் தரவு மையப் பிரிவான நெக்ஸ்ட்ரா, ஆம்பின் எனா்ஜி ட்ரான்ஸிஷன் மற்றும் சோலாா் ஆா்ட் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

இது குறித்து நெக்ஸ்ட்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நெக்ஸ்ட்ராவின் தரவு மையங்களுக்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வழங்குவதற்கு ஆம்பின் மற்றும் சோலாா் ஆா்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காா்பன் உமிழ்வைக் குறைத்து, 2031-க்குள் நிகர பூஜ்ய இலக்கை அடையும் நெக்ஸ்ட்ராவின் இலக்கை அடைவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எங்கள் பங்களிப்பை உறுதி செய்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

SCROLL FOR NEXT