கனரா வங்கி 
வணிகம்

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி

Din

கனரா வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.

இது ஏழை,எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவானது.

இந்நிலையில், சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள், வெளிநாடுவாழ் இந்தியா் சேமிப்புக் கணக்குகள் என அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது.

பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது. அந்த வரிசையில் மற்றொரு பொதுத் துறை வங்கியான கனரா வங்கியும் இணைந்துள்ளது. வரும் நாள்களில் வேறு பல வங்கிகளும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரமாகிய கஜோல்!

அவையில் அரசு பேசுவதை எதிர்க்கட்சிகள் கேட்பதில்லை: கங்கனா

அழகான முகம், துப்பாக்கியைப் போல உதடுகள்! அலுவலகப் பெண்ணை வர்ணித்த டிரம்ப்!

உன்னை அறிந்தால் உலகை அறியலாம்... ரஷ்மிகா மந்தனா!

ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் உச்சம் தொட்ட வெள்ளி விலை!

SCROLL FOR NEXT