டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!

தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக இன்று நிறைவடைந்தது.

DIN

மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக இன்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதட்டங்கள் மற்றும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் காரணமாகவும் மற்றும் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்பு குறித்து காத்திருந்ததாக அந்நிய செலவானி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கலாம் என்றும், அடுத்த கொள்கையில் இதே போன்ற மற்றொரு குறைப்பு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதத்தில் மத்திய வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைப்புக்கு உட்படும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறதாக தெரிவித்துள்ளது.

இதனிடையில், வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.69 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.69 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.05 ஐ தொட்ட நிலையில், முடிவில் 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிந்தது.

இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT