கோப்புப்படம் IANS
வணிகம்

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

DIN

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 439.92 புள்ளிகள் உயர்ந்து 81,439.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 138.65 புள்ளிகள் உயர்ந்து 24,758.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

எட்டர்னல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எம்&எம், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதேநேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டியில் பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.40 சதவீதம், 0.80 சதவீதம் அதிகரித்தன.

தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.95 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

SCROLL FOR NEXT