வணிகம்

சைஃப்கோ சிமெண்ட்ஸின் 60% பங்குகளை கைப்பற்றிய ஜே.கே சிமெண்ட்!

ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமெண்ட்ஸின் 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமெண்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமெண்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமெண்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்கும் முதல் பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக ஜே.கே. குழும நிறுவனம் உருவெடுத்துள்ளது.

இதனையடுத்து, சைஃப்கோ சிமெண்ட்ஸின் நிர்வாக கட்டுப்பாட்டை தன் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜே.கே சிமெண்ட்.

கையகப்படுத்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ்கிருஷ்ண சிங்கானியா, இந்த கையகப்படுத்துதலின் மூலம், ஜம்மு காஷ்மீரில் ஒரு வலுவான இருப்பை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.

அதே வேளையில், சைஃப்கோ சிமெண்ட்ஸ் குடும்பத்தை ஜேகே சிமெண்ட் குழுமத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஜேகே சிமெண்ட் நிர்வாக இயக்குநர் ராகவ்பத் சிங்கானியா.

உலகளவில் வெள்ளை சிமெண்ட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் ஜேகே சிமெண்ட்ஸ், மொத்த வெள்ளை சிமெண்ட் உற்பத்தி திறன் 1.12 மில்லியன் டன்னுடன் சுவர் புட்டி 1.33 மில்லியன் டன் உற்பத்தி செய்து வருகிறது.

இதையும் படிக்க: தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிப்படைத் தன்மைக்காகத் தேர்வா? துணிந்து பொய் சொல்கிறார் ஞானேஷ் குமார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குளிர் ஜாலம்... மாதுரி ஜெயின்!

ஓடிடியில் காந்தா எப்போது?

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சாலையில் ஓடிய கரடி! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! | வால்பாறை | Shorts

SCROLL FOR NEXT