அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி 2025 படம்: அப்பாச்சி வலைதளம்
வணிகம்

புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்!

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி 2025 மாடல் பைக் பற்றி...

DIN

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2025ஆம் ஆண்டு வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

முந்தைய ஆர்டிஆர் 200 4வி மாடலைவிட சில அப்டேட்களுடன் வெளியாகியுள்ள இந்த மாடலின் ஷோ ரூம் விலை ரூ. 1.54 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

என்ஜினை பொறுத்தவரை முந்தைய மாடலில் இருந்த சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் தொடர்கிறது. ஓபிடி 2பி விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 199 சிசியில் சோதிக்கப்பட்டுள்ளது.

20.8 எச்.பி. பவர் மற்றும் 17.25 என்.எம். டார்க் தொடர்கிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் அர்பன், ஸ்போர்ட், ரெயின் ஆகிய மோட்களில் பைக்கை ஓட்டும் வசதி உள்ளது.

மேட் பிளாக், கிளாஸி பிளாக் மற்றும் கிரானைட் கிரே ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நிற பைக்கின் சக்கரங்களும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோஃபார்ம் கைப்பிடி, ரேஸ் பைக்கை போன்று ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜஸ் கிளட்ச், லீவர்கள், டிஜிட்டல் திரைகள், எல்இடி விளக்குகள், புளூடூத் இணைக்கும் வசதிகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT