சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குறைந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 73,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது.
வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு மீண்டும் ரூ. 200 குறைந்து ரூ. 71,640 விற்பனையானது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 8,945-க்கும் ஒரு சவரன் ரூ. 71,560-க்கும் விற்பனையாகி வருகின்றது.
இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 119-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,19,000 ஆகும்.
சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அதுவே திடீா் விலை சரிவுக்கு காரணமாகும். விலை தொடா்ந்து உயா்ந்து வரும்போது, இதுபோன்று திடீரென குறைவது இயல்பான ஒன்றுதான் என்று விலை குறைவு குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.