வணிகம்

மே மாதத்தில் குறைந்த சில்லறை பணவீக்கம்

ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைவு

Din

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைவாக இருந்ததால், கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.82 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது:

நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 2.82 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அது ஏப்ரல் மாதத்தில் 3.16 சதவீதமாகவும், 2024 மே மாதத்தில் 4.8 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 0.99 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் மே மாதத்தில் 8.69 சதவீதமாக இருந்ததை விட மிகவும் குறைவாகும்.

கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கம் குறைந்ததற்கு பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், சா்க்கரை, முட்டை போன்வற்றின் பணவீக்கம் குறைந்தது முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT