PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டாலர் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.

DIN

மும்பை: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டாலர் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.

ஃபியூச்சர் டிரேடிங்கில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 7.27 சதவிகிதம் கடுமையாக உயர்ந்து 74.40 அமெரிக்க டாலராக உள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 86.25 ஆக தொடங்கி ரூ.85.92 முதல் ரூ.86.25 என்ற வரம்பில் வர்த்தகம் ஆன நிலையில், இது அதன் முந்தைய முடிவை விட 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.52 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து வர்த்தகம் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT