போக்கோ எஃப் 7  படம் / நன்றி - போக்கோ (எக்ஸ்)
வணிகம்

ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் 7

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

DIN

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

ரியல்மீ ஜிடி 7, ஐகியூ நியோ 10 மற்றும் விவோ டி4 ஆகிய ஸ்மார்ட்போன்களின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போன்களில் போக்கோ எஃப் 7 மகுடம் சூடும் வகையில் அதிக பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த மற்றும் மத்திய தர விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் புதிதாக போக்கோ எஃப் 7 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜூன் 24ஆம் தேதி முதல் அறிமுகமாகவுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போனின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய தர ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7,550mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • இதன்மூலம், வழக்கமான பயன்பாட்டில் 2.18 நாள்களுக்கு ஸ்மார்ட்போனில் பேட்டரி திறன் நீடிக்கும் என போக்கோ கூறுகிறது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதோடு மட்டுமின்றி 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகும் என்றும் போக்கோ குறிப்பிடுகிறது.

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 4 ஆம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 12GB உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

  • 6.83 அங்குல அமோலிட் திரையுடன், திரையில் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறனுடன் வருகிறது.

  • பின்பக்கத்தில் 50MP சென்சாருடன் 8MP அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT