முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்...

Updated On : 17 ஜூன், 2025 at 10:00 AM
கோப்புப்படம் - ANI
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் புதிய உச்சம் தொட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 74,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நேற்று) வணிகம் தொடங்கியதும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

தொடர்ந்து, இன்று காலையும் சவரனுக்கு அதிரடியாக ரூ. 840 குறைந்து ரூ. 73,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 9,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.