கோப்புப் படம் File photo
வணிகம்

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் இன்றைய வர்த்தகத்தில் மருந்து நிறுவனங்கள் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டன.

DIN

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத்தத்தை எதிர்கொண்டன.

சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பங்கு 6.88 சதவிகிதமும், ஷில்பா மெடிகேர் 4.92 சதவிகிதமும், சுவென் லைஃப் சயின்சஸ் 4.78 சதவிகிதமும், வோக்ஹார்ட் 4.14 சதவிகிதமும், எரிஸ் லைஃப் சயின்சஸ் 3.77 சதவிகிதமும், கிரானுல்ஸ் இந்தியா 3.60 சதவிகிதம் சரிந்தன.

கிளாக்சோஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் 3.39 சதவிகிதமும், நாட்கோ பார்மா பங்குகள் 3.36 சதவிகிதமும் மற்றும் லூபின் 3.34 சதவிகிதமும் சரிந்து முடிவடைந்தன.

சன் பார்மா 2.18 சதவிகிதம் சரிந்து சென்செக்ஸில் மிகவும் பின்தங்கிய நிறுவனமாக உருவெடுத்தது.

மருந்து இறக்குமதிகள் மீதான வரிகள் விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்கள் பங்குகள் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகி சுமார் 1.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

பிஎஸ்இ-யில் ஹெல்த்கேர் குறியீடு இன்று 1.82 சதவிகிதம் சரிந்து 43,373.62 ஆக இருந்தது.

இதையும் படிக்க: ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT