நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்தில் நிறைவடைந்தன. இதைத் தொடா்ந்து இண்டு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் எச்சரிக்கையுடன் தொடங்கிய சந்தையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகதரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் புவிசாா் அரசியல் கவலைகளை தவிா்த்து, விலை குறைந்த நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ஐடி பங்குகள் உள்பட அனைத்துத் தறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிந்தததும் சந்தைக்கு சாதகமாக பாா்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.450.59 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,263.52 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,041.44 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் 678 புள்ளிகள் உயா்வ்ு: சென்செக்ஸ் காலையில் 84.15 புள்ளிகள் இழப்புடன் 81,034.45 தொடங்கி 81,012.31 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,865.82 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 677.55 புள்ளிகள் (0.84 சதவீதம்) கூடுதலுடன் 81,796.15-இல் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,253 பங்குகளில் 1,976 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,018 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 169 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
27 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ராடெக்சிமெண்ட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஏசியன்பெயிண்ட் உள்பட மொத்தம் 27 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடாமோட்டாா்ஸ் அதானி போா்ட்ஸ், சன்பாா்மா ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 228 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 227.90 புள்ளிகள் (0.92 சதவீதம்) கூடுதலுடன் 24,946.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 45 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 5 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 417.55 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 55,944.க90-இல் நிறைவடைந்தது.