முகப்பு
வணிகம்

சரிவுடன் வர்த்தமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 17 ஜூன், 2025 at 12:09 PM
பங்குச் சந்தை - ANI
பகிர்:

பங்குச் சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,869.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.53 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 212.71 புள்ளிகள் குறைந்து 81,583.44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 70.65 புள்ளிகள் குறைந்து 24,875.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சன் பார்மா, எட்டர்னல், ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளில் சீனாவின் ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.