பங்குச் சந்தையில் ஏற்றத்தாழ்வுடன் அதானி குழும பங்குகள்  
வணிகம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் முடிவு!

சென்செக்ஸ் 138.64 புள்ளிகள் சரிந்து 81,444.66 புள்ளிகளாகவும் 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 41.35 புள்ளிகள் சரிந்து 24,812.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

DIN

மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவை முன்னிட்ட எச்சரிக்கை, ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக அச்சுறுத்தியதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சரிவில் தொடங்கிய வர்த்தகம் சிறிது நேரத்தில் உயர்ந்து, சென்செக்ஸ் குறியீட்டெண் 81,858.97 புள்ளிகளை எட்டியது. பிறகு தடுமாறிய நிலையில், சரிய தொடங்கி முடிவில் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 138.64 புள்ளிகள் சரிந்து 81,444.66 புள்ளிகளாகவும் 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 41.35 புள்ளிகள் சரிந்து 24,812.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் என்டிபிசி ஆகியவை சரிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மாருதி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எச்யுஎல், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை சரிந்தும் அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, டிரென்ட், டைட்டன் கம்பெனி, மாருதி சுசுகி மற்றும் எம் & எம் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

துறை ரீதியாக ஆட்டோ, தனியார் வங்கி, நுகர்வோர் சாதனங்கள் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளுமான ஐடி, மீடியா, உலோகம், எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிவுடன் முடிவடைந்தன.

ஆதும் இன்வெஸ்ட்மென்ட், ஃபெடரல்-மொகுல், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ், ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ், லுமாக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ்பி ப்ராஜெக்ட்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், ரெடிங்டன், நவின் ஃப்ளூரின், ரெடிங்டன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

குறிப்பாக மத்திய கிழக்கு பதற்றங்கள் இந்தியாவை வெகுவாகவே பாதிக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் அச்சுறுத்தியதால், உள்நாட்டு சந்தையில் தொடக்க லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,482.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முந்தைய வர்த்தகத்தில் ரூ.8,207.19 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயரந்த நிலையில் ஹாங்காங் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.35 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 75.42 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

SCROLL FOR NEXT