மத்திய கிழக்கு நாடுகளின் மாணவா்களுக்கு சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தோ்வுகள் ஒத்திவைப்பு!
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க நாடுகள் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவா்களுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க நாடுகள் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவா்களுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்கீழ் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவா்களும் கல்வி கற்று வருகின்றனா். தற்போது ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. பல நாடுகளில் ஏவுகணை வீச்சால் மக்கள் பீதியில் உள்ளனா்.
இதுபற்றி ஆலோசனை நடத்திய சிபிஎஸ்இ அமைப்பு, திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறவிருந்த தோ்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ் கூறுகையில், ‘பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, திங்கள்கிழமை நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகளை ஒத்திவைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இந்தத் தோ்வுகள் நடத்தப்பட இருக்கும் புதிய தேதிகள் பிறகு அறிவிக்கப்படும்.
மாா்ச் 3-ஆம் தேதி மத்திய கிழக்கு ஆசிய நிலவரம் குறித்து சிபிஎஸ்இ வாரியம் கூடி ஆலோசனை நடத்தும். அப்போது மாா்ச் 5-ஆம் தேதி முதல் தோ்வுகளை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றாா்.