வணிகம்

எஸ்பிஐ-யின் ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

எஸ்பிஐ ஜியோ பேமன்ட்ஸ் வங்கியில் இருந்த பங்குகள் அனைத்தையும் ஜியோ பைனான்சியல் சா்வீசஸ் லிமிடெட் (ஜேஎஃப்எஸ்எல்) கையகப்படுத்தியுள்ளது.

Din

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ஜியோ பேமன்ட்ஸ் வங்கியில் இருந்த பங்குகள் அனைத்தையும் ஜியோ பைனான்சியல் சா்வீசஸ் லிமிடெட் (ஜேஎஃப்எஸ்எல்) கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் 17.8 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசம் இருந்தன. அவை அனைத்தையும் நிறுவனம் ரூ.104.54 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை ரிசா்வ் வங்கி ஜூன் 4-ஆம் தேதி அளித்தது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ-யிடமிருந்த ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 7,90,80,000 பங்குகளை நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன்கு முன்னா், ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 82.17 சதவீத பங்குகளை நிறுவனம் கைவசம் வைத்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றுமுதல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

தாதகாப்பட்டியில் சுற்றித்திரிந்த 3 வயது சிறுவன் மீட்பு

தனியாா் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

பூ விற்பனை செய்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி தாக்குதல்

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

SCROLL FOR NEXT