இந்திய ஏற்றுமதி 
வணிகம்

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய பழம்!

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது வாழைப்பழம்.

DIN

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் அதிகளவில் ஏற்றுமதியாகும் பழமாக இதுவரை இருந்த திராட்சையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது வாழைப்பழம்.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம் அதிகம் விரும்பி சாப்பிடும் பழமாக மாறி வரும் நிலையில், இந்திய ஏற்றுமதி அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து கடந்த 2023 - 24ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழத்தின் மதிப்பு ரூ.2,474 கோடியாக இருந்த நிலையில், 2024 - 2025ஆம் நிதியாண்டில் இது ரூ.3,209 கோடியாக அதிகரித்துள்ளது என்கின்றன தரவுகள். இதனால், வாழைப்பழ ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஏராளமான பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை திராட்சைதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்தியாவில் திராட்சை அதிகம் விளைகிறது. அதுவும் தமிழகத்தில் பன்னீர் திராட்சை அதிகம் விளைவிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது, திராட்சையை பின்னுக்குத் தள்ளி வாழைப்பழம் முதலிடம் பிடித்துள்ளது. வாழைப்பழம் என்று எடுத்துக்கொண்டால் ஆந்திரத்தில் அதிக விளைச்சல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம், கர்நாடகத்திலும் வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

திராட்சையை விட வாழை விலை குறைவு என்பதால், தற்போது அதிகம் வாங்கும் பழங்களில் வாழை இடம்பிடித்து ஏற்றுமதியும் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O! ஜன. 9 மாநாட்டில் கூட்டணி அறிவிக்கப்படும்!பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

நெல்லை ஆணவக் கொலை: முதல்வரைச் சந்தித்த கவினின் தந்தை!

காந்தா வெளியீடு ஒத்திவைப்பு?

சாதாரண மக்களுக்காக செயலாற்றியவா் வசந்திதேவி!

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT