நிர்மலா சீதாராமனிடமிருந்து டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினைப் பெறும் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி.  
வணிகம்

சிட்டி யூனியன் வங்கிக்கு டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருது

2024-25 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.

DIN

2024-25 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.

நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதுகள் வழங்கும் விழா, தில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினைப் பெற்றார்.

தனியார் துறை வங்கிகளில் 2வது இடத்திற்கான விருதை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 1904ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வங்கி, தமிழ்நாட்டில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இந்த வங்கி நாட்டிற்கு 120 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 880 கிளைகளையும், சுமார் 1767 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. 31.03.2025 நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ.116,592 கோடி. 2024-25 நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,124 கோடி ஆகும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்த புதுமையான மற்றும் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது.

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT