வணிகம்

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் 2.77% பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறி உள்ளது.

DIN

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியதாக இன்று தெரிவித்தார்.

பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.13,301.47 விலையில் கைமாறியதாகவும், இதன் ஒப்பந்த மதிப்பு ரூ.2,221.34 கோடி என்றது. பங்கு விற்பனையைத் தொடர்ந்து, டிக்சனில் வச்சானியின் பங்கு 5.34 சதவிகிதத்திலிருந்து 2.57 சதவிகிதமாகக் குறைந்தது.

இதற்கிடையில், மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டு பகுதிகளாக 14.45 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் டிக்சன் டெக்னாலஜிஸில் 2.39 சதவிகித பங்குகளை தலா ஒன்றுக்கு ரூ.13,307.96 என்று விலையில் மொத்தமாக ரூ.1,924 கோடிக்கு வாங்கி உள்ளது மோதிலால் ஓஸ்வால்.

பங்குகளை வாங்கிய பிறகு, டிக்சன் டெக்னாலஜிஸில் மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் பங்குகள் 2.24 சதவிகிதத்திலிருந்து 4.63 சதவிகிதமாக உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) பங்குகள் 3.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.14,554.10 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT