PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக நிலைபெற்றது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததால், பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.19 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $69.20 ஆக உள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.07 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.91 முதல் ரூ.86.27 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக நிறைவடைந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ஐந்து மாதங்களில் இல்லாத அளவான ரூ.86.78 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

உப்பனாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி நாளை மின்சார ரயில்கள் இயங்கும்

SCROLL FOR NEXT