விவோ  படம் / நன்றி - விவோ
வணிகம்

ஒரு மாதத்திற்குள் இன்னொரு ஸ்மார்ட்போனா? ஜூலை 2-ல் அறிமுகம் செய்கிறது விவோ!

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, டி 4 லைட் 5ஜி ஜூலை 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

DIN

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, டி 4 லைட் 5ஜி ஜூலை 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

கடந்த 18ஆம் தேதி விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகமான நிலையில், தற்போது ஒரு மாதத்திற்குள் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை விவோ அறிமுகம் செய்யவுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் எதிரொலியாக ஒரு மாதத்திற்குள் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஜூலை 2ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கவுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 9,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவோ டி 4 லைட் சிறப்பம்சங்கள்

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் கொண்டது.

  • 2 டிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • இந்த விலைக்கு அடக்கமாக 6000mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • முழுமையாக சார்ஜ் செய்தால், 70 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 22 மணிநேரம் விடியோக்களை பார்க்கலாம். 17 மணிநேரம் இணையத்தில் விடியோக்களை பார்க்கலாம். 9 மணி நேரம் கேம் விளையாடலாம் என விவோ உறுதி அளித்துள்ளது.

  • 6.7 அங்குல பெரிய திரை கொண்டது. திரையின் பிரகாசம் அதிகமாக இருக்கும் வகையில் 1000 nits திறன் கொண்டுள்ளது.

  • தூசு மற்றும் தண்ணீர் புகாத்தன்மையுடைய IP 64 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தில் தானியங்கியாக மேம்படுத்தப்படும். செய்யறிவு மூலம் புகைப்படங்களின் பின்னணியையும் நீக்கலாம்.

இதையும் படிக்க | 11 ஆண்டுகளில் 125% உயா்ந்த காபி ஏற்றுமதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

துள்ளும் மான்... நைலா உஷா!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT