மும்பை பங்குச்சந்தை. 
வணிகம்

அக்டோபருக்குப் பின் புதிய உச்சம் தொட்ட நிஃப்டி! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்ததைப் பற்றி...

DIN

தேசிய பங்குச் சந்தை எண் குறியீட்டு எண் நிஃப்டி, கடந்தாண்டு அக்டோபர் மாதத்துக்குப் பின் புதிய உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்து நிறைவடைந்தது.

மத்திய கிழக்கில் தொடர்ந்துவந்த போர்ப் பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஏற்ற, இறக்கத்தில் இருந்துவந்த இந்திய பங்குச் சந்தையில், அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் தேசிய பங்குச்சந்தைக் குறீயிட்டு எண் நிஃப்டி மீண்டும் 25,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் சற்று லாபம் ஈட்யதின் வெளிப்பாட்டின் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் உயர்வுடன் முடிந்தன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000.36 புள்ளிகள் உயர்ந்து 83,755.87 புள்ளிகளில் நிறைவடைந்தன. இது மொத்தத்தில் 1.21 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தைக் குறீயிட்டு எண் நிஃப்டி 304.25 புள்ளிகள் உயர்ந்து 25,549 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிஃப்டி 50 குறியீட்டில் பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜியோ ஃபைனான்சியல் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்வுடன் இருந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்து.

மும்பை பங்குச் சந்தையில் இன்ட்ராடே வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியது. கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ. 20 லட்சம் கோடி (20 டிரில்லியன்) அளவுக்கு உயர்ந்துள்ளது. விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகியவை கணிசமான சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி ரியால்டி, நிஃப்டி மீடியா மற்றும் நிஃப்டி ஐடி ஆகியவை 1 சதவிகிதம் சரிந்து, மிகக் கடுமையான சரிவைக் கண்டன. இதற்கிடையில், நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் தலா 2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

Nifty Hits New 2025 High; Closes Above 25,500 Points for First Time Since October

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

சித்திரச் சிரிப்பு... சைத்ரா ஆச்சார்!

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

தூய்மைப் பணியாளர்கள் நலனுக்கான புதிய அறிவிப்புகள்! பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT