சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் 2 புதிய கிளைகள் திறப்பு
Updated On : 28 ஜூன், 2025 at 2:39 AM
முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய பிரதேசத்தின் பிதாம்பூா், ரத்லாம் ஆகிய நகரங்களில் புதிய கிளைகளை நிறுவனம் திறந்துள்ளது. அந்த மாநிலத்தில் நடப்பு நிதியாண்டுக்குள் ரூ.300 கோடி கடன் பட்டுவாடா செய்ய நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
வாய்ப்புள்ள சந்தைகளில் இருப்பை அதிகரிக்கும் எங்களின் நோக்கத்தை நிறைவேற்ற இந்தப் புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement