சென்னை: வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.2500 குறைந்து ரூ.71,500-க்கு கீழ் விற்பனை ஆகிறது.
வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ.71,880-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.8,985-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 குறைந்து ரூ.8,930க்கும் விற்பனையாகிறது.
புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.72,560-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், வியாழக்கிழமை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.
ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.2,500 வரை குறைந்துள்ளதால், தங்க முதலீட்டாளர்களும் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளி விலை கடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுற்று, மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியிருப்பது, உலகை உலுக்கிய ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம், உள்ளிட்ட அறிவிப்புகள் தங்கம் விலை குறையக் காரணங்களாகக் கூறப்படுகிறது. உள்ளூர் அளவில் என்றால், நடப்பு ஆனி மாதமும், வரவிருக்கும் ஆடி மாதமும் சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்தவை இல்லை என்பதாலும் தங்கம் நுகர்வு குறைந்து தங்கம் விலை குறைவதற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
Good news has been released, gold prices are falling and selling this morning.
இதையும் படிக்க.. எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.