ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் 
வணிகம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும்.

DIN

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும்.

ஆகாஷ், இஷா மற்றும் அனந்த் ஆகியோர் 2023ல் எண்ணெய் தொடங்கி தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகக் குழுமத்தின் இயக்குநர்களாக சேர்க்கப்பட்டாலும், ஆனந்த் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

நிர்வாகம் சாராத இயக்குநர்களாக இருந்த போது, முகேஷ் அம்பானியின் வாரிசுகளான மூவருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்ற நிலையில், 2023-24ஆம் நிதியாண்டில் ஒவ்வொருவருக்கும் ரூ.4 லட்சம் அமர்வு கட்டணமும் (sitting fee) மேலும் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் உள்பட தலா ரூ.97 லட்சம் வழங்கப்பட்டது.

அனந்தின் சம்பளம் மற்றும் சலுகைகள் ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை இருக்கும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரூ.1,000 கோடி திரட்டிய ஐசிஐசிஐ வங்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

SCROLL FOR NEXT