அரிசி / கோதுமை (கோப்புப் படம்) 
வணிகம்

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

DIN

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியை எட்ட வேளாண் அமைச்சகம் இலக்கு வைத்துள்ள போதிலும் குறைந்த கொள்முதல் இலக்கு தற்சமயம் வந்துள்ளதாக தெரிவித்தது.

கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய ரபி பயிர்களுக்கான கொள்முதல் இலக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில உணவு செயலாளர்களுடனான கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

கலந்துரையாடல்களுக்குப் பிறகு, வரவிருக்கும் 2025-26 சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை கொள்முதல் இலக்கு 31 மில்லியன் டன்னாகவும், அரிசி 7 மில்லியன் டன்னாகவும், சிறுதானியங்கள் 1.6 மில்லியன் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

வரவிருக்கும் சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை மற்றும் அரிசி கொள்முதலை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதே வேளையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

ஏப்ரல் முதல் தொடங்கும் 2025-26 ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் பெறுவதையும் நலத்திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்ய வகையில் கோதுமை கொள்முதல் நடைபெற்றது.

2024-25ல் கோதுமை கொள்முதலில் 30 முதல் 32 மில்லியன் டன் இலக்குக்கு மாறாக சுமார் 26.6 மில்லியன் டன்னை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT