PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.

அமெரிக்காவில் மந்தநிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஒரு நிலையற்ற போக்கு மற்றும் அந்நிய மூலதனம் தொடர்ந்து வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மீட்சியைக் இது கட்டுப்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.37 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, ​​டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.39 ஆகக் குறைந்தது, இதனையடுத்து மத்திய நேர வர்த்தகத்தில் இது ரூ.87.17 ஆக உயர்ந்தும், வர்த்தக நேர முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.87.31 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

தில்லியில் போலி பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இருவா் கைது

போா்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணி: அதிமுகவுக்கு அமைச்சா் சக்கரபாணி பதில்

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு - அக். 22-இல் குடியரசுத் தலைவா் தரிசனம்

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

SCROLL FOR NEXT