ஃபோர்டு நிறுவனம் 
வணிகம்

பின்வாங்குகிறதா ஃபோர்டு? சென்னை ஆலையில் கார் உற்பத்தி இல்லையாம்!

சென்னை ஃபோர்டு ஆலையில் கார் உற்பத்தி இல்லையாம்!

DIN

சென்னையை அடுத்த மறைமலைநகரில் அமையும் ஃபோர்டு தொழிற்சாலையில், கார் உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்றும், வெறும் என்ஜின் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, சென்னைக்கு அருகே உள்ள மறைமலை நகர் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டிருநத் நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, ஃபோர்டு நிறுவனமானது சென்னை தொழிற்சாலையில் கார் உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்றும், வெறும் என்ஜின் மட்டுமே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்போகிறது என்றும், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு மறைமலைநகரில் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தியது. இந்த நிலையில், மீண்டும் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிப்புப் பணிகளுக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கும் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பு போன்றவை அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கையாக மாறியிருப்பதால், ஃபோர்டு நிறுவனமும் தனது முடிவில் பின்வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

ஆந்திரம்: கோயில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு !

ஃபெரோவின் தங்கக் கிரீடம் உள்ளே... உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

4 எலிகளுடன் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சீனாவின் இளம் வீரர் குழு!

SCROLL FOR NEXT