வணிகம்

8 சதவிகிதம் உயர்ந்து முடிந்த ரயில்டெல் பங்குகள்!

பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரெயில்டெல் நிறுவனம் ரூ.16.8 கோடி ஆர்டரை பெற்றதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்கின் விலை 8 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

DIN

பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரெயில்டெல் நிறுவனம் ரூ.16.8 கோடி ஆர்டரைப் பெற்றதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்கின் விலை 8 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

என்.எஸ்.இ-யில் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகள், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் 8.12 சதவிகிதம் உயர்ந்து ரூ.321.65 ஆக உள்ளது. அதே வேளையில், கடந்த 4 நாள் அமர்வில், பங்கின் விலை 12 சதவிதம் வரை உயர்ந்து முடிந்துள்ளது.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இடும் பணிக்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரூ.16,89,38,002 பணி ஆணையைப் பெற்றுள்ளதாக, ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இது அனைத்து வரிகள் உள்பட என்றும், இந்த திட்டம் மார்ச் 2026க்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேச மின்னணு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.37 கோடி பணி ஆர்டரைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

2024 டிசம்பரில், நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.65.05 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.86ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண மாட்டேன்: மாதம்பட்டி ரங்கராஜ்

மெட்ரோ ரயில் 4-வது வழித்தடம்: கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!

தீபாவளி... அவ்னீத் கௌர்!

குட் பேட் அக்லி மிகப்பெரிய லாபமில்லை: தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT