முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.86ஆக முடிவு!

உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 பைசா உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.

Updated On : 21 மார்ச் 2025, 6:31 pm IST
- PTI Graphics
பகிர்:

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.93 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.30 ஐ தொட்ட நிலையில், முடிவில் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.

Advertisement

Advertisement

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது அமர்வாக அதிகரித்து, இது நாள் வரையில் 123 காசுகள் உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments