stock market 
வணிகம்

சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!

பங்குச் சந்தை இன்று(மார்ச் 24) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

DIN

பங்குச் சந்தை இன்று(மார்ச் 24) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,456.27 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 2.19 மணியளவில், சென்செக்ஸ் 1,133.51 புள்ளிகள் அதிகரித்து 78,039.02 புள்ளிகளில் இருந்தது. கடந்த பிப். 7 ஆம் தேதிக்கு முன்னதாக சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 350 புள்ளிகள் உயர்ந்து 23,700 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில்,, என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட், எஸ்பிஐஎன், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆர்ஐஎல், எல் அண்ட் டி, டிசிஎஸ், மாருதி சுசுகி போன்றவை அதிக லாபம் ஈட்டின.

சன் பார்மா, பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், சொமாடோ, டைட்டன் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

மாணவப் பேச்சாளா்களுக்கு பகுத்தறிவு அவசியம்

தடகளப் போட்டிகளில் வெற்றி: பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT