முகப்பு
பங்குச் சந்தை
வணிகம்

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

தொடர்ந்து 7 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று(மார்ச் 26) இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

வணிகம்

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

தொடர்ந்து 7 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று(மார்ச் 26) இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

Updated On : 26 மார்ச், 2025 at 6:59 AM
பங்குச் சந்தை
பகிர்:

தொடர்ந்து 7 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று(மார்ச் 26) இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,021.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.18 மணியளவில், சென்செக்ஸ் 369.12 புள்ளிகள் குறைந்து 77,648.07 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74.20 புள்ளிகள் குறைந்து 23,594.45 புள்ளிகளில் இருக்கிறது.

சென்செக்ஸ் பங்குகளில் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், பாரதி ஏர்டெல், எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

அதேநேரத்தில் சொமாட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

கடந்த 7 நாள்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீளுமா? என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →