ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை பயனர்களுக்காக ஜியோ வழங்கியிருந்தது. இந்தச் சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு, பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக கிரிக்கெட் பார்க்கும் சலுகையை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.
இந்தச் சலுகை மார்ச் 31 வரை வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்தச் சலுகையை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜியோ வெளியிடாததால், இன்றுடன் இச்சலுகை முடிகிறது. இந்த சலுகையுடன் நாளும் 2ஜிபி டேட்டா திட்டத்தை ரீசாஜ் செய்தவர்களுக்கு வரம்பிற்குட்பட்ட 5ஜி டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள்
ஜியோ சலுகை முடிந்த நிலையில், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள விடியோக்கள் மற்றும் ஐபிஎல் நேரலையைக் காண வேண்டுமென்றால், புதிய ரீசாஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும்.
ரூ. 949-க்கு ரீசார்ஜ் செய்தால், வரம்பற்ற அழைப்புகள், நாள்தோறும் 2ஜிபி டேட்டா, நாள்தோறும் 100 குறுஞ்செய்திகள் வழங்கப்படுவதுடன் 84 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
இதேபோன்று ரூ. 195-க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 15ஜிபி 5ஜி டேட்டாவும், ரூ. 100-க்கு 5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் 90 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
அதாவது, ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனுடன் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ வழங்கியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! எப்படி? ஏன்?
இதையும் படிக்க | ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.