சேலஞ்சர் எலைட்.. 
வணிகம்

ரூ.34 லட்சத்தில்..! நவீன வசதிகளுடன் சேலஞ்சர் எலைட், பர்சூட் எலைட்!

நவீன வசதிகளுடன்.. சேலஞ்சர் எலைட், பர்சூட் எலைட் பைக்கைப் பற்றி..

DIN

இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் சேலஞ்சர் எலைட் மற்றும் பர்சூட் எலைட் ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 1834cc லிக்விட் கூல்ட் வி-டுவின் என்ஜின் இடம்பெற்றுள்ளதால், இதனால், அதிகபட்சமாக126 குதிரைத் திறனையும் 181.4 nm முடுக்குவிசைத் திறனையும் வெளிப்படுத்த முடியும். 22 லிட்டர் அளவுக்கு இதில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம்.

6 ஸ்பீட் கியர் பாக்ஸுடன் 7 அங்குல தொடுத்திரை கூடிய இன்போடெயின்மெண்ட் டிஸ்பிளே, ஆப்பிள் கார்பிளே, மியூசிக் கண்ட்ரோல், டிஜிட்டல் சாவி வசதி, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த பைக்கில் உள்ளன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 14 முதல் 18 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும்.

இந்தியன் பர்சூட் எலைட் மோட்டார் சைக்கிளானது 1916 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட 20,000 பவர் பிளஸ் பைக்குகளை போன்ற தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிசன் பயண வாகனமான இந்த பைக்கில் மூன்று வண்ணங்கள் கலந்த மாதிரியாக பிளாக் கேண்டி, பிளாக் ஃபாரஸ்ட் கேண்டி பினிஸிங்கில் கிடைக்கிறது.

மேலும், இதற்கு அழகு சேர்க்கும் விதமாக தங்க நிறத்தில் கைகளால் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பிரீமியன் பைக் பிளாக் டார்க் ஹார்ஸ் பினிஸிங் செய்யப்பட்டு பவர்பிளஸ் 112 என்ஜின் கவர்கள் போடப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

லிமிடெட் எடிசன் பைக்குகளான இந்த வகையில், தி சேலஞ்சர் எலைட் 39,999 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ. 34.20 லட்சம்), பர்சூட் எலைட் 49,999 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ. 42.75 லட்சம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சேலஞ்சர் எலைட்டில் 350 பைக்குகளும், பர்சூட் எலைட்டில் 250 பைக்குகளும் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அன்னையர் நாளில்.. இதயம் தொடும் பரிசுப் பொருள்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT