வணிகம்

ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,051 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.808 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.9,106 கோடியிலிருந்து ரூ.9,215 கோடியாக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,335 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.2,656 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.29,706 கோடியிலிருந்து ரூ.33,676 கோடியாக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT