கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் உயா்ந்தது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,43,896-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,83,615 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 3,74,592-ஆக இருந்த நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 15 சதவீதம் வளா்ச்சியடைந்து 4,30,330-ஆக உள்ளது. இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 3,01,449-லிருந்து மிதமாக அதிகரித்து 3,23,647-ஆக உள்ளது.
2024 ஏப்ரலில் 80,508-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 ஏப்ரலில் 45 சதவீதம் அதிகரித்து 1,16,880-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.