டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக முடிந்தது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.45 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.10 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.47 ஐ தொட்ட நிலையில், முடிவில் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக முடிந்தது.
வெள்ளிக்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு ஏழு மாத உயர்வை எட்டிய நிலையில், முடிவில் 3 காசுகள் குறைந்து ரூ.84.57 ஆக முடிந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.