ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.25 என்ற வரலாறு காணாத சரிவில் வர்த்தகம் நிறைவடைந்தன.
மும்பை: வளைகுடாப் பகுதிகளில் மீண்டும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதால், விநியோகச் சங்கிலி குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து, ரூ. 95.25 என்ற வரலாறு காணாத சரிவில் வர்த்தகம் நிறைவடைந்தன.
ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 110 அமெரிக்க டாலராக இருப்பது, இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் பொருளாதாரங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே வேளையில், அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணத்தால் முதலீட்டாளர்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.30 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு சரிந்து, ரூ. 95.44 என்ற வரலாறு காணாத சரிவை எட்டியது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவை விட 2 காசுகள் சரிந்து ரூ. 95.25 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து, ரூ. 95.23 என்ற வரலாறு காணாத நிலையில் நிறைவடைந்தது.
The rupee fell 2 paise to close at an all-time low of 95.25 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.