முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக நிலைபெற்றது.

Updated On : 6 மே, 2025 at 1:10 PM
பகிர்:

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.84.45-ஆக நிலைபெற்றது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்று வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக எடைபோட்டு, இந்திய ரூபாயை விளிம்பில் வைத்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 84.28 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.26 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.63 ஐ தொட்ட நிலையில், முடிவில் 15 காசுகள் சரிந்து ரூ.84.30ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ.84.30 ஆக இருந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும் நிஃப்டி 81.55 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

முழு கட்டுரையைப் படிக்க →